
கட்டுப்பாட்டு விலைக்கு அப்பால் முட்டைகளை விற்பனை செய்த ஐந்து வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட வாடிக்கையாளர் சேவை அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இதன்படி, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக அதன் நிரந்தர அதிகாரி அமில ரத்நாயக்க தெரிவித்துள்ளதுடன் அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதால், சந்தேகநபர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன், கட்டுப்பாட்டு விலைக்கு அப்பால் முட்டைகளை விற்பனை செய்யும் வியாபாரிகளை கண்டுபிடிக்கும் வகையில் சுற்றிவளைப்பு நடத்தப்படும் என நுவரெலியா மாவட்ட வாடிக்கையாளர் சேவை அதிகார சபையின் வதிவிட அதிகாரி மேலும் தெரிவித்தார்.