
பம்பலப்பிட்டி கடல் மார்க்கத்தில் அனுமதியின்றி மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 8 இளைஞர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, நேற்று காலை அவ்வழியாக செல்லும் வாகனங்கள் மற்றும் பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் மோட்டார் சைக்கிள்களை ஓட்டிச் செல்வதாக குற்றம் சுமத்தப்பட்டு 8 சந்தேகநபர்களும் அவர்களுக்கு சொந்தமான 5 மோட்டார் சைக்கிள்களும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்தோடு, கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 17 மற்றும் 23 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் எதிர்வரும் 19ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.