
பாணந்துறை தெற்கு மொதரவில பிரதேசத்தில் ஹெரோயின் வைத்திருந்த 62 வயதுடைய பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதன்படி, சந்தேகநபரிடம் இருந்து 8 கிராம் 240 மில்லிகிராம் ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதோடு சந்தேகநபர் இன்று பாணந்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
இதேவேளை, பாணந்துறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட நான்கு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் பாணந்துறை, எலுவில, கொஸ்கஸ் சந்தி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போதே இது இடம்பெற்றுள்ளது.
மேலும், சந்தேகநபர்கள் கஞ்சா பொட்டலங்களை மின்கம்பங்கள், தொலைபேசி கம்பங்கள் போன்ற இடங்களில் மறைத்து வைத்து நீண்ட காலமாக கடத்தல்களை மேற்கொண்டு வருவது தெரியவந்துள்ளது.
அத்தோடு, சந்தேகநபர்களை இன்று பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.