
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு எதிராக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச சமர்ப்பித்த பூர்வாங்க ஆட்சேபனைகள் தொடர்பான வாய்மூல உரைகளை ஜூன் 16 ஆம் திகதி தொடர முடியாது என கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, குறித்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளதோடு குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவும் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
இதேவேளை, முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச அமைச்சராக இருந்த காலத்தில் முறையான வருமானத்திற்கு அப்பால் 75 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான சொத்துக்களை சட்டவிரோதமாக சம்பாதித்ததாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளது.
அத்தோடு, முறைப்பாடு செய்யப்பட்ட இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஆயிஷா ஜினசேன, நீதிமன்றத்தில் விளக்கங்களை முன்வைத்து, 2017ஆம் ஆண்டு இந்த பிரதிவாதி தொடர்பான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட போதிலும், இது வரையில் அது தொடர்பான விசாரணையை ஆரம்பிக்க முடியவில்லை என சுட்டிக்காட்டினார். .
மேலும் இந்த வழக்கை கையளிக்க முடியாது எனவும், அதனைப் பராமரிக்க முடியாது எனவும் பிரதிவாதி எழுத்துமூல உரைகளை சமர்ப்பித்துள்ளதாக தெரிவித்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், காலதாமதத்தை கருத்தில் கொண்டு இது தொடர்பில் விரைவில் முடிவெடுக்குமாறு நீதிமன்றத்தை கோரியுள்ளார்.
இதன்படி, அரசியல் பழிவாங்கும் நோக்கில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பிரதிவாதி சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த வீரசிங்க நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதுடன் குறித்த வழக்கை ஒத்த மற்றுமொரு வழக்கு தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைப்பதே பொருத்தமானது எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த வீரசிங்க மேலும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், இந்த வழக்கின் சாட்சிய விசாரணை ஆரம்பிக்கப்பட வேண்டும் என நீதிமன்றம் கருதினால், விசாரணைக்கான திகதியை நிர்ணயிக்குமாறும் அவர் நீத்திமரத்தில் தெரிவித்தார்.
ஆனால், இந்த வழக்கைப் போன்றே மற்றொரு வழக்கில் மேல்முறையீட்டு மனுவை பாதுகாப்பு தரப்பு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தாலும், குறித்த சூழ்நிலை இந்த வழக்கின் அடுத்த நடவடிக்கைகளுக்கு இடையூறாக இருக்காது என்று நீதிபதி சுட்டிக்காட்டியதோடு பிரதிவாதிகள் முன்வைத்த ஆரம்ப ஆட்சேபனைகள் தொடர்பான வாய்மொழி உரைகளை ஜூன் 16ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.