
இலங்கை மின்சார சபையினால் உள்நாட்டு மின்சார கட்டணத்தை திருத்தும் தீர்மானத்தை இரத்து செய்யும் உத்தரவு
விடுதலை செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை எதிர்வரும் 17ஆம் திகதிக்கு ஒத்திவைக்க உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, பிரியந்த ஜயவர்தன, குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதிலும், நீதியரசர் ஜனக் டி சில்வா இந்த அமர்வில் இடம்பெறாத காரணத்தினால், குறித்த மனுக்கள் மீதான பரிசீலனை வரும் 17ஆம் திகதி ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்தோடு, முன்னாள் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரும் மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க நுகர்வோர் சம்மேளனத்தின் தலைவர் ஜனக ரத்நாயக்க,மற்றும் உத்தியோகத்தர்களான வணக்கத்துக்குரிய மாத்தறை ஆனந்த சாகர தேரர் உள்ளிட்ட ஆறு பேரினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, அதன் உறுப்பினர்கள், இலங்கை மின்சார சபை, இலங்கை மின்சார நிறுவனம், சட்டமா அதிபர் மற்றும் பலர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளதுடன் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முறையான அனுமதியின்றி இலங்கை மின்சார சபையினால் மின்சாரக் கட்டணம் திருத்தப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளதோடு இது சட்டத்திற்கு முரணானது என சுட்டிக்காட்டிய மனுதாரர்கள், கட்டண திருத்தம் தொடர்பான முடிவுகளை செல்லாது என உத்தரவிடக் கோரியும் மனு தாக்கல் செய்துள்ளனர்.