
மத நல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ஜெரோம் பெர்னாண்டோ என்ற மத போதகர் தெரிவித்த கருத்து தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி, பொறுப்பற்ற அறிக்கைகளினால் மத முரண்பாடுகள் உருவாகி நாட்டின் அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் எனவே குறித்த போதகர் தெரிவித்த கருத்து தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு தமக்கு அறிக்கையளிக்குமாறு ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
அத்தோடு, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர், ஜனாதிபதி செயலகத்தின் பிரதானி சாகல ரத்நாயக்கவிற்கு ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதோடு ஜனாதிபதியின் பணிப்புரையின் பிரகாரம், இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பணிமனைகளின் பிரதானி சாகல ரத்நாயக்க குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவித்துள்ளார்.