
மதவாச்சி, குடவல்பொல, ஹிகுரக்வெவ பிரதேசத்தில் தொல்பொருட்களை தோண்டிக்கொண்டிருந்த சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்படி, மதவாச்சி பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த கைது இடம்பெற்றுள்ளது.
மேலும், தோண்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் மற்றும் பலி பொருட்கள் உள்ளிட்டவை கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்துள்ளதோடு கைது செய்யப்பட்ட நபர் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் எனவும் சந்தேகநபர் இன்று மதவாச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.