
வணக்கத்திற்குரிய ஜெரோம் பெர்னாண்டோ நாட்டை வந்தடைந்தவுடன் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்படலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதன்படி, நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட பயணத்தடையின் கீழ் அவர் கைது செய்யப்படலாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
எனினும், ஆயர் ஜெரோம் பெர்னாண்டோ தற்போது நாட்டை விட்டு வெளியேறியுள்ளாதோடுபயணத்தடை விதிக்கப்பட்ட நிலையில் அவர் எவ்வாறு நாட்டை விட்டு வெளியேறினார் என்று ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பயணத்தடை விதிக்கப்படுவதற்கு முன்னரே அவர் நாட்டை விட்டு வெளியேறியதாக தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போது நடைபெற்று வரும் விசாரணைகளின் பெறுபேறுகளின் அடிப்படையில் வணக்கத்திற்குரிய ஜெரோம் பெர்னாண்டோவிற்கு எதிராக சர்வதேச பொலிஸாரின் ஊடாக சட்டத்தை அமுல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, குறித்த ஆயர் ஜெரம் பெர்னாண்டோ பணமோசடி செய்ததாக குற்றம் சாட்டப்படுவார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தபோதிலும் இப்போதைக்கு இதைப்பற்றிய தகவல்கள் குறிப்பிட முடியாதுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நாட்டிற்கு வரவுள்ளதாக ஆயர் ஜெரோம் பெர்னாண்டோ தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் குறிப்பிட்டுள்ளார்.