
இளைஞர் பாராளுமன்றத்தின் வெளிவிவகார பிரதி அமைச்சர் அஹ்மத் சாதிக் இலங்கைக்கான SAARC கலாசார மையத்தின்
பிரதி பணிப்பாளர் மதிப்புக்குரிய திருமதி Dr. Bina Gandhi Deori அவர்களை இலங்கை SAARC கலாசார மையத்தில் சமீபத்தில் சந்தித்தார்.
இச்சந்திப்பில் ; இளைஞர் பாராளுமன்றம் தொடர்பான அறிமுகம் மற்றும் இலங்கையின் தற்போதைய நிலவரங்கள் அதில் பிரதானமாக இளைஞர்கள் முகம் கொடுக்கும் சவால்கள் மேலும் இளைஞர்களுக்கான வெளிவிவகார வாய்ப்புகள் மற்றும் கலை, கலாசாரம், சமூக துறையில் இன்றைய இளைஞர்களின் ஈடுபாடுகள குறித்து கலந்துரையாடப்பட்டன.
மேலும் இக்கலந்துரையாடலின் போது SAARC கலாசர மையத்தின் பிரதி பணிப்பாளர் குறிப்பிடுகையில் ;
SAARC அமைப்பினை பொருத்தவரையில் SAARC நாடுகளுக்கிடையில் கலை, கலாசார மற்றும் சமூக துறைகளில் வளர்ச்சியினையும் அனைத்து நாடுகளது புரிந்துணர்வினையும் ஏற்படுத்தும் முகமாகவே செயல்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் பலவிதமான செயற்திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் எதிர்காலத்திலும் கலை,கலாசாரத்தை ஊக்குவிக்கும் விதமான செயற்பாடுளை நடைமுறைப்படுத்த உள்ளோம் என குறிப்பிட்டார்.
இந்த சந்திப்பின் போது இளைஞர் பாராளுமன்ற வெளிவிவகார பிரதியமைச்சர் SAARC நாடுகளின், இளைஞர்களுக்கிடையில் கலை , கலாச்சாரத்தை மேம்படுத்தும் விதமாக சர்வதேச மாநாடு ஒன்றை இலங்கையில் நடாத்துவதற்கான முன்மொழிவு ஒன்றை SAARC பிரதி பணிப்பாளர் அவர்களுக்கு சமர்ப்பித்தார் என்பது முக்கியமான விடயமாகும்.
இக்கலந்துரையாடலின் பின்னர், இவ்வமைப்பினுடைய வளர்ச்சி இளைஞர்களின் ஊடாக மேலும் வலுப்படுத்த சிறந்த நடவடிக்கைகள் எதிர்காலங்களில் எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.