
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கு போதிய பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
இதன்படி, தமக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிடுமாறு கோரி ஷானி அபேசேகர தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ரொஹந்த அபேசூரிய இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.
அத்தோடு, ஷானி அபேசேகரவுக்கு போதிய பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், மேலதிக அதிகாரிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதனிடையே, திருத்தப்பட்ட மனுவை தாக்கல் செய்ய மனுதாரரை அனுமதித்த பெஞ்ச், உரிய திருத்தம் செய்யப்பட்ட மனுவை ஜூன் 28 ஆம் திகதி தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.