
துபாயில் இருந்து இலங்கை வந்த பயணி ஒருவரின் பயணப் பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 கிலோ தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போதே குறித்த தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தங்கம் கம்பி வடிவில் தயார் செய்து, சாமான்களில் மறைத்து, இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதுடன் தங்கத்தின் பெறுமதி 43 மில்லியன் ரூபா எனவும் கைது செய்யப்பட்ட நபர் 35 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.