
புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் மூன்றரை கிலோ தங்கத்துடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, அவர் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்திணை வந்தடைந்த போது குறித்த கைது இடம்பெற்றுள்ளதோடு பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.