
பதில் நிதி அமைச்சராக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவும், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் பதில் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன்படி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிங்கப்பூர் மற்றும் ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருக்கும் நிலையில் ஜனாதிபதி நாடு திரும்பும் வரை இராஜாங்க அமைச்சர்களும் பதில் அமைச்சர்களாக கடமையாற்றுவார் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.