
எதிர்வரும் வாரத்தில் சுமார் 35 புதிய வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீட்டுச் சபையுடன் ஒப்பந்தங்களில் கைச்சாத்திடவுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இதன்படி, கனியம், மணல், உலோகம் என பல துறைகளில் முதலீடு செய்பவர்கள் இந்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் புதிய முதலீடுகள் மூலம் உள்ளூர் இளைஞர்களுக்கான தொழில் வாய்ப்புகள் குறித்து அரசாங்கம் அதிக கவனம் செலுத்தும் என்றும் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
அத்தோடு, ஆடைத் தொழிற்சாலைகளுக்கான ஆர்டர்கள் பற்றாக்குறையாக இருந்தாலும், ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்படுவது போன்ற பாரிய பிரச்சினைகல் இதுவரை எதுவும் இல்லை என முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மேலும் தெரிவித்துள்ளார்.