
நாடளாவிய ரீதியில் 19 தேசிய கல்வி விஞ்ஞான பீடங்கள், 08 ஆசிரியர் கலாசாலைகள் மற்றும் 113 ஆசிரியர் சேவை நிலையங்களில் கடமையாற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள் இன்று அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்படி, பல வருடங்களாக ஆசிரியர் பயிற்றுவிப்பாளர்களைப் பாதித்துள்ள பல பிரச்சினைகளை முன்வைத்து இந்தப் பணிப்புறக்கணிப்பு அமுல்படுத்தப்படுவதாக இலங்கை ஆசிரியர் கல்வியாளர் சேவை உத்தியோகத்தர்களின் கூட்டு நிபுணத்துவ சங்கத்தின் இணைச் செயலாளர் தம்மிக்க மிரிஹான தெரிவித்தார்.
மேலும், தமது கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் பதிலளிக்காவிடின் எதிர்காலத்தில் கடுமையான தொழில்சார் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என இலங்கை ஆசிரியர் கல்வியாளர் சேவை உத்தியோகத்தர்களின் கூட்டு நிபுணத்துவ சங்கத்தின் இணைச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.