
ஆயுர்வேத சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு, வரைவு தயாரிப்பாளரால் தயாரிக்கப்பட்ட சட்டமூலம் அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்பட்டு பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் இந்த யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன் 1961 ஆம் ஆண்டின் 31 ஆம் இலக்க ஆயுர்வேத சட்டத்தின் திருத்தத்திற்கு கடந்த வருடம் ஒக்டோபர் 31 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
அத்தோடு, இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் சட்ட வரைவினால் தயாரிக்கப்பட்ட வரைபு சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவைக்கப்பட்டுள்ளது.