
அரசாங்கத்தின் புதிய திட்டங்கள் மற்றும் திட்டங்களை மதிப்பிடுவதற்கான செயல்முறைக்காக தேசிய வளர்ச்சிக் குழுவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்படி, அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார்.
இதேவேளை, கொழும்பு பிரதேச செயலகத்தின் கொம்பஞ்சாவீதியினை சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் கொம்பஞ்சாவீதி என அழைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மேலும், அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணையின் பிரகாரம் குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.