
சட்டவிரோதமான முறையில் கழிவு தேயிலையை கொண்டு சென்ற சந்தேகநபர் ஒருவர் அகரபத்தனை பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்படி, டயகமவில் இருந்து நுவரெலியாவுக்கு குறித்த ஜீப் வண்டியில் 370 கிலோ கழிவு தேயிலை கண்டுபிடிக்கப்பட்டு பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டதாக எமது குறு டிவி செய்தியாளர் தெரிவித்தார்.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நுவரெலியாவை வசிப்பிடமாகக் கொண்டவர் என்பதுடன் மேலதிக விசாரணைகளுக்காக அவரை அக்ரபத்தனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.