
மாணவர் அடக்குமுறை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு கோரி பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்ட பேரணியை கலைப்பதற்காக பொலிஸார் இன்று பிற்பகல் நீர் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளனர்.
பேராதனை பல்கலைக்கழகத்தில் இருந்து கண்டி நகருக்கு எதிர்ப்பு பேரணியினர் பயணிக்க முற்பட்ட போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்படி. பேராதனை தாவரவியல் பூங்காவிற்கு அருகில், வீதித் தடைகளைப் பயன்படுத்தி பேரணியை பொலிஸார் தடுக்க முற்பட்டதையடுத்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதித் தடைகளை உடைத்துக்கொண்டு முன்னே சென்றதாகவும் பேராதனை பல் வைத்திய பீடத்திற்கு அருகில் மீண்டும் வீதித் தடைகளை பயன்படுத்தி ஆர்ப்பாட்டக்காரர்களை பொலிஸார் தடுக்க முற்பட்டதாகவும், இதன் போது போராட்டக்காரர்களை கலைக்க கண்ணீர் புகை குண்டுகளை வீசியதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
ஆனால், போராட்டக்காரர்கள் கலைந்து செல்லாததால், போலீசார் பல தடவைகள் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதாகவும்
பேராதனை தாவரவியல் பூங்காவிற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற வான் ஒன்றும் பொலிஸாரின் கண்ணீர் புகைக்குண்டு வீசி சேதப்படுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.