
ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமையின் (JICA) பிரதம பிரதிநிதி டெட்சுயா யமடா மற்றும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று (23) இடம்பெற்றது.
இதன்படி, அமைச்சர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு செயற்பாடுகள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, மின்சார சபையின் தொடர்ச்சியான சீர்திருத்தச் செயற்பாடுகள் மற்றும் மின்சாரத் துறையின் உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) வழங்கிய ஆதரவிற்காக டெட்சுயா யமடாவிடம் அமைச்சர் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
மேலும்,நிறுவப்படவுள்ள இலங்கை மின்சார சபையின் சீர்திருத்த செயலகத்திற்கு ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமையின் (JICA) ஆதரவும் நிதியும் வழங்கப்படும் எனவும் அடுத்த 12 மாதங்களில் இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு மாற்றத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு செயலகம் பணிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.