
வரி அதிகரிப்புடன் மதுபானம் மற்றும் சிகரெட்டின் தேவை வெகுவாக குறைந்துள்ளதாக பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இதன்படி, கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இந்த வருடத்தின் முதல் 4 மாதங்களில் சிகரட் பாவனை 12 வீதமும் பத்தில் 4 ஆகவும் குறைந்துள்ளதாகவும் மது பாவனை 7.4 வீதத்தால் குறைந்துள்ளதாகவும் பதில் நிதியமைச்சர் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும், தேவை குறைந்துள்ள போதிலும் வற் வரி வருமானம் அதிகரித்துள்ளதாகவும், மதுபானத்தின் விலையை குறைப்பதற்கான தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.