
ஹபராதுவ – ஹெயினடிகல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 37 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அவர் தனது மனைவியுடன் முச்சக்கரவண்டியில் பயணித்த போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளதோடு மோட்டார் சைக்கிளில் வந்த ஓரிருவர் தான் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு ஓடியதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதன்படி, சந்தேக நபர்களை கண்டுபிடிக்க ஹபராதுவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.