
வெல்லவாய பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஹெரோயினுடன் மூன்று சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதன்படி, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் நான்காம் வருட மாணவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்களிடம் இருந்து சுமார் 13 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மாத்தறை, பலஹருவ மற்றும் வெஹெரய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என வெல்லவாய பொலிஸார் தெரிவித்துள்ளதோடு சந்தேகநபர்கள் வெல்லவாய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.