
இலங்கையில் மீனவர்கள் மண்ணெண்ணெய்க்கு நாள் ஒன்றுக்கு ஐம்பது முதல் பத்தாயிரம் ரூபாய் வரை செலவழிப்பதாகவும், அந்த செலவைக் குறைக்கும் வகையில், மின்சார கலங்களால் இயக்கப்படும் படகு என்ஜின்களை தயாரிக்க இலங்கையில் தனியார் பொறியியல் நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
இதன்படி, மீனவ மக்களுக்கு சீனாவில் இருந்து பெறப்பட்ட மண்ணெண்ணெய் இலவச விநியோகத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அமைச்சர் இதனைக் குறிப்பிட்டதுடன் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக மின்சார செல் இயந்திரங்களும் அறிமுகப்படுத்தப்பட்டன.
சீனா அரசாங்கத்தின் உதவியுடன் மின்சார செல் என்ஜின்களை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து தேவையான ஆதரவை வழங்குமாறு சீனாதூதுவரிடம் அமைச்சர் கேட்டுக்கொண்டதோடு பாணந்துறை மீன்பிடி துறைமுகத்தில் சுற்றுலாத்துறைக்காக முதலீடு செய்து பாணந்துறை மீன்பிடி துறைமுகத்தை சுற்றுலா இடமாக மாற்ற சீனா வர்த்தகர்களுக்கு அமைச்சர் அழைப்பு விடுத்தார்.