
நேற்று இரவு பாணந்துறை வடக்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையம் வரப்பட்ட பெண் ஒருவர் திடீரென நோய்வாய்ப்பட்டு உயிரிழந்துள்ளதாக பாணந்துறை பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாணந்துறை, திக்கல பிரதேசத்தை சேர்ந்த 52 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சட்டவிரோதமாக மதுபானம் கடத்திய குற்றத்திற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் சட்டவிரோத மதுபானம் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலையடுத்து பாணந்துறை வடக்கு பொலிஸ் குழுவொன்று நேற்று இரவு அவரது வீட்டை சுற்றிவளைத்துள்ளனர்.
சந்தேகத்திற்கிடமான பெண் சட்டவிரோத மதுபானத்துடன் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் கொண்டு வரப்பட்ட நிலையில், அவர் திடீரென சுகவீனமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.