
சட்டவிரோத மதுபான வியாபாரத்தை சுற்றிவளைப்பதற்காக பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றை ஏற்றிச் சென்ற பொலிஸ் ஜீப் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதன்படி, ஜீப் வண்டியின் கண்ணாடி சேதமடைந்துள்ளதாக டயகம பொலிஸார் தெரிவித்துள்ளதோடு டயகம கிழக்கில் சட்டவிரோதமான முறையில் காய்ச்சி வடிகட்டிய மதுபான விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சுற்றிவளைப்புக்கு சென்ற போதே குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மேலும், குறித்த பகுதியின் நுழைவு வீதியில் மறைந்திருந்த நபரோ அல்லது குழுவொன்றோ சென்று கொண்டிருந்த ஜீப் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாக டயகம பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.