
உத்தரவின் பேரில் இடைநிறுத்தப்பட்ட பட்டதாரி ஆசிரியர் ஆட்சேர்ப்புக்கான பரீட்சையை மீள நடாத்துவதற்கு சட்டமா அதிபர் ஊடாக உச்ச நீதிமன்றத்திற்கு செல்லவுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த் இன்று (26) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதன்படி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்
அத்தோடு, மார்ச் 26 ஆம் திகதி விசாரணை நடத்த திட்டமிடப்பட்டு, உச்ச நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதால், விசாரணையை நிறுத்தி வைக்க தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சையை மீண்டும் நடத்த அனுமதித்தால், மிகக் குறுகிய காலத்தில் ஆட்சேர்ப்பு செய்து அவர்களுக்குத் தேவையான பயிற்சிகளை வழங்கவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.