
இந்தியாவின் தனுஷ்கோடியில் இலங்கை அகதி குடும்பத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி, 46 வயதான தந்தை, அவரது 45 வயது மனைவி மற்றும் அவர்களது 18 வயது மகள் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இவர்கள் நேற்று இரவு யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியா நோக்கிப் புறப்பட்டதாகத் தெரிவிக்கப்படுவதோடு மண்டபம் மறுவாழ்வு மைய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.
இந்த மாத தொடக்கத்தில் இருந்து சுமார் 10 இலங்கை அகதிகள் தனுஷ்கோடிக்கு வந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.