
புத்தளம் பகுதியிலுள்ள பாடசாலையொன்றின் விளையாட்டு மற்றும் ஒழுக்காற்று ஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமாணவர் குழு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, நான்கு பாடசாலை மாணவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டதாகவும், நேற்று 25 ஆம் திகதி கைது செய்யப்பட்ட 17 மாணவர்கள் இன்று (26) புத்தளம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதாகவும் ஒரு மாணவருக்கு தலா 5 லட்சம் ரூபாய் சரிதா பிணையில் விடுவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், பொதுப் பரீட்சை முடிவடைந்து ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் புத்தளம் பொலிஸ் நிலையத்தில் ஆஜராகுமாறும், ஏதேனும் காரணத்திற்காக முறைப்பாட்டாளர் தாக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டால் பிணை இரத்துச் செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.