
ஸ்ரீலங்கா டெலிகொம், கொழும்பு லோட்டஸ் டவர், திரிபோஷா நிறுவனம் உள்ளிட்ட பல நிறுவனங்களை நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, தொடர்புடைய நிறுவனங்களுக்கு மேலதிகமாக, தேசிய உப்பு நிறுவனம், மஹிந்த ராஜபக்ஷ டெலி சினிமா பார்க், இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனம், அரச பொறியியல் கூட்டுத்தாபனம், கல் ஓயா தோட்ட தனியார் நிறுவனம், பரந்தன் கெமிக்கல்ஸ் லிமிடெட், லங்கா ஜெனரல் டிரேடிங் கம்பனி லிமிடெட், பி.சி.சி. நிறுவனம் மற்றும் நோர்த் சீ லிமிடெட் ஆகிய நிறுவனங்களும் நிதியமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னதாக, இந்த நிறுவனங்கள் தொழில்நுட்பம், திட்ட ஊக்குவிப்பு, மீன்பிடி, சுகாதாரம், பெருந்தோட்டக் கைத்தொழில், கைத்தொழில், நகர அபிவிருத்தி, வீடமைப்பு, பௌத்தம், மதம் மற்றும் கலாச்சாரம், வர்த்தகம், வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆகிய அமைச்சுகளின் கீழ் கொண்டுவரப்படவுள்ளது.