
பலவீனமடைந்து முடங்கியிருந்த பொருளாதாரம் ஸ்திரமான நிலைக்கு வந்துகொண்டிருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, தேசிய மாற்றத்திற்கான பாதை வரைபடத்தில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி, கடந்த காலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட சரியான நடைமுறைகளின் காரணமாகவே இந்த நிலைமை சாத்தியமானதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், இதே பாதையில் இன்னும் சிறிது காலம் பயணிப்பதன் மூலம் சிரமங்களையும் துன்பங்களையும் குறைத்து நல்ல பொருளாதாரத்தை உருவாக்க முடியும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.