
காலநிலை மாற்றம் தொடர்பான உத்தேச சர்வதேச பல்கலைக்கழகம் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, காலநிலை மாற்றம் தொடர்பான ஆராய்ச்சிகளுக்காக சர்வதேச அங்கீகாரம் பெற்ற சுமார் 130 விஞ்ஞானிகளைக் கொண்ட குழுவை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அடையாளம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, கொரிய எக்சிம் வங்கி மற்றும் ஹார்வர்ட் மற்றும் எம்ஐடி போன்ற பிரபல நிறுவனங்களும் குறித்தப் பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கு ஆதரவளிக்க இருப்பதாகவும் இந்த பல்கலைக்கழகம் ஆராய்ச்சிக்கு மட்டுமே அர்ப்பணிக்கப்பட்ட ஒரு முதுகலை நிறுவனமாகும் என் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.