
மேல்மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை எதிர்வரும் ஜூன் மாதம் 23ஆம் திகதி அறிவிப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.
இதன்படி, போராட்டத்தின் போது காலி முகத்திடல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனை சந்தேக நபராக பெயரிடுமாறு சட்டமா அதிபர் இந்த கடிதத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த விசாரணை மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன முன்னிலையில் நடைபெற்ற போதே குறித்த திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.