
தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதன்படி, இன்று (11) அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், நாட்டின் மிகப்பெரிய நகரம் மற்றும் வர்த்தக மையமான ஜோகன்னஸ்பர்க் அமைந்துள்ள Gauteng மாகாணம் முழுவதும் கட்டிடங்கள் குலுங்கியதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.