
முல்லேரியா – ஹல்பராவ பிரதேசத்தில் வேலை செய்யும் இடத்தில் புல் வெட்டும் இயந்திரம் ஒன்றினால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படும் குழந்தையின் தாத்தா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதன்படி, குறித்த வழக்கு இன்று (11) கொழும்பு அளுத்கடை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, உயிரிழந்த குழந்தையின் இறுதிச் சடங்குகள் இன்று தலஹேன பொது மயானத்தில் இடம்பெற்றது.