
எதிர்வரும் எந்தவொரு தேர்தலிலும் தமது கட்சி தலைமையிலான கூட்டணியினால் வெற்றிபெற முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதன்படி, ஹிக்கடுவ நகர மண்டபத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ரத்கம தொகுதியின் பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.