
பகவந்தலாவ பிரதேசத்தில் பத்து வயது பாடசாலை மாணவர் ஒருவர் தனது வீட்டின் கழிவறையில் துணியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதன்படி, உயிரிழந்தவர் 5ஆம் ஆண்டில் கல்வி கற்கும் பாடசாலை மாணவர் எனவும் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குறித்த சிறுவன் கழிவறைக்கு சென்று, தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
அத்தோடு, உயிரிழந்த மாணவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக திக் ஓயா ஆரம்ப வைத்தியசாலையின் சட்ட வைத்தியரிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் ஹட்டன் நீதவான் பார்வையிட்டதன் பின்னர் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் எனவும் எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.