
23 வருட சேவையின் பின்னர் இலங்கை விமானம் ஒன்று அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்க தயாராகவுள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான முதலாவது ஏ.-330-200 விமானத்தை பிரான்சுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் இந்த விமானங்களை உற்பத்தி செய்யும் பிரான்சின் ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து குத்தகை அடிப்படையில் வாங்கிய முதல் விமானம் இதுவாகும்.
அத்தோடு, இன்னும் நல்ல நிலையில் உள்ள ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான இந்த விமானம் தனது சேவைக் காலம் மற்றும் குத்தகைக் காலத்தை பூர்த்தி செய்துள்ளதால், அடுத்த சில நாட்களில், பிரான்சில் உள்ள ஏர்பஸ் நிறுவனத்திடம் எடுத்துச் சென்று ஒப்படைக்கப்பட உள்ளது.
மேலும், இந்த விமானத்தில் 18 வணிக வகுப்பு ஆசனங்களும் 251 பொருளாதார வகுப்பு ஆசனங்களும் உள்ளதாகவும் லண்டன் ஹீத்ரோ, ஜேர்மனியின் பிராங்பேர்ட், அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் மற்றும் ரஷ்யாவின் மொஸ்கோ போன்ற நீண்ட தூர பயணங்களுக்கு இந்த விமானம் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸினால் பயன்படுத்தப்பட்டதுடன், தற்போது இந்த விமானம் 100,000 விமான மணிநேரங்களை பூர்த்தி செய்துள்ளதாகவயம் எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.