
தாம் உட்பட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பதவிகளை கைப்பற்றிய 06 பேர் கட்சியில் முன்பைப் போலவே தொடர்ந்தும் செயற்படுவார்கள் என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
இதன்படி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 06 அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள கடிதம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எவ்வாறாயினும், அரசாங்கப் பதவிகளை ஏற்றுக்கொண்ட தமது கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிரான ஒழுக்காற்று விசாரணைகள் இடைநிறுத்தப்பட்டுள்ள போதிலும், அவர்கள் மீண்டும் பணியில் சேர்க்கப்படவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.