
போலி கச்சேரியை சுற்றிவளைத்த பாணந்துறை வடக்கு பொலிஸார் முன்னாள் நகர சபையின் எழுத்தர் (clerk) ஒருவரை கைது செய்துள்ளனர்.
பாணந்துறையைச் சேர்ந்த 65 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்படி, புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், களுத்துறை மாவட்ட பிரதேச செயலாளர்கள், பிரதேச சபை செயலாளர்கள், காணி பதிவாளர்கள், வருவாய் பரிசோதகர்கள், அதிபர்கள் உட்பட பல அரச அதிகாரிகளின் 31 உத்தியோகபூர்வ முத்திரைகள் அங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சந்தேக நபர் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.