
திருகோணமலை, ஏறக்கண்டி பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும் நாற்பத்தைந்து நீர் ஜெல் குச்சிகளை விற்பனை செய்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்படி, திருகோணமலை, ஏறக்கண்டி பகுதியில் கடற்படையினரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த கைது இடம்பெறுள்ளது.
அத்தோடு, திருகோணமலை, ஏறக்கண்டி பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்லத்துடன் சந்தேக நபரும், அவரிடம் இருந்த வெடிபொருட்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக குச்சவெளி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.