
தலங்கம, பத்தரமுல்ல பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தலங்கம பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த கைது இடம்பெற்றுள்ளது.
மேலும், சந்தேகநபரிடம் இருந்து 05 கிராம் 200 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் இன்று கடுவெல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, மாவனெல்ல, நீர்கொழும்பு மற்றும் தெஹிவளை ஆகிய இடங்களில் ஹெரோயின் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பெண் ஒருவர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.