
உள்நாட்டு வர்த்தகத் திணைக்களம் மற்றும் தொலைத்தொடர்பு திணைக்களத்தை மூட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பையும் வெளியிட அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, நுகர்வோர் விவகார அதிகாரசபை ஸ்தாபிக்கப்பட்டதுடன் இரத்துச் செய்யப்பட்ட உள்நாட்டு வர்த்தக திணைக்களம் கலைக்கப்பட்டுள்ளது.
மேலும், 1990 பெப்ரவரி 06 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவிக்கப்பட்ட தொலைத்தொடர்புத் திணைக்களத்தை கலைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.