
ரஷ்யா Aeroflot விமான சேவையின் துணை விமானி ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளதாக கட்டுநாயக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, அவர்கள் தங்கியிருந்த கட்டுநாயக்க பீலவத்த பகுதியில் உள்ள ஹோட்டலில் வடிகாலில் விழுந்து 63 வயதான துணை விமானி உயிரிழந்துள்ளார்.
அத்தோடு, மரணத்திற்கான காரணம் மாரடைப்பு என சந்தேகிக்கப்படுவதுடன், பிரேத பரிசோதனை இன்று நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது.
மேலும், இன்று பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து ரஷ்யாவின் மொஸ்கோவிற்கு புறப்பட்ட ஏரோஃப்ளோட் விமானத்தின் துணை விமானியாக குறித்த துணை விமானி செயற்படவிருந்தார்.