
ஊழலுக்கு எதிரான சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தை எதிர்வரும் 21ஆம் திகதி நடத்துவதற்கு நாடாளுமன்ற விவகாரக் குழு தீர்மானித்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் 20ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையில், வரவு செலவுத் திட்ட அலுவலகத்தின் இரண்டாம் வாசிப்பு விவாதத்தை எதிர்வரும் 20ஆம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டதாக நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.
மேலும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை மீதான சபை ஒத்திவைப்பு மீதான விவாதத்தை எதிர்க்கட்சிகளின் பிரேரணை மீதான விவாதத்தை எதிர்வரும் 22ஆம் திகதி நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.