
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வெளிநாடு சென்றிருப்பதன் காரணமாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தொழில் நுட்ப அமைச்சரின் பணிகளை மேற்பார்வையிட நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன்படி, இன்று (17) முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி இந்த நியமனத்தை வழங்கியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.