
மெட்டியகொட, செனிகம கோவிலில் இருந்து சுமார் 150 மீற்றர் தொலைவில் நிறுத்தப்பட்டிருந்த கெப் வண்டியில் பயணித்த நபர் ஒருவரை மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு சென்றுள்ளனர்.
இதன்படி, துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் கெப் வண்டியை ஓட்டி ஹிக்கடுவ பொலிஸ் நிலையத்திற்கு வந்ததாகவும், காயமடைந்த நபரை 1990 அம்புலன்ஸ் சேவை மூலம் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்க ஹிக்கடுவ பொலிஸ் நிலைய அதிகாரிகள் ஏற்பாடு செய்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும், சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை மெட்டியகொட பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.