
மினுவாங்கொடை பஸ்டன் மாவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரை காரில் வந்த சிலர் துப்பாக்கியால் சுட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்கள் மினுவாங்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கம்பஹா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்கள் 33 மற்றும் 43 வயதுடைய ஹினடயான பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், குறித்த துப்பாக்கிச் சூடு T-56 ரக துப்பாக்கியால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும், சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை மினுவாங்கொடை பொலிஸார் ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.