
இலங்கையின் ஐந்தாவது இளைஞர் பாராளுமன்றத்தின் மூன்றாவது அமர்வு நேற்று (17) மற்றும் இன்று (18) ஜனாதிபதி செயலகத்தின் பிரதான கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இதன்படி, ஆரம்ப அமர்வில் அனைத்து இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி 131 உறுப்பினர்கள் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, ஐந்தாவது இளைஞர் பாராளுமன்றத்தின் மூன்றாவது அமர்வை ஆரம்பித்து வைத்து பிரதமர் பாத்தும் ரணசிங்க வரவேற்பு உரையை நிகழ்த்தினார்.
மேலும், உத்தேச இளைஞர் பாராளுமன்ற சட்டம் மூலம் குறித்து விவாதிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.