
தற்போதுநாட்டில் 95 ஒக்டேன் பெற்றோலுக்கு எவ்விதமான தட்டுப்பாடுகளும் இல்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சரான காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதன்படி, அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், சிலோன் மினரல் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் இந்தியன் ஆயில் நிறுவனத்திடம் போதுமான அளவு 95 ஒக்டேன் பெற்றோல் கையிருப்பு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, தற்போது இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் 3,087 மெட்ரிக் தொன் டீசல், 2977 மெற்றிக் தொன் சுப்பர் டீசல், 53,632 மெட்ரிக் தொன் 92 ஒக்டேன் பெற்றோல், 601 மெட்ரிக் தொன் 95 ஒக்டேன் பெற்றோல் மற்றும் ஜெட் எரிபொருள் ஆகியவை கையிருப்பில் உள்ளதாகவும் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் எரிபொருள் விநியோகம் செய்யப்படாவிட்டாலும் ஒக்டேன் 95 ரக பெற்றோல் பங்குகள் தேவைக்கேற்ப விநியோகிக்கப்படுவதாக அமைச்சர் தனது டுவிட்டர் பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.